• Nov 23 2024

பாடசாலை மதிய உணவு விநியோகத்தில் சிக்கல்; கல்வி அமைச்சு எடுத்த அதிரடி தீர்மானம்

Chithra / Oct 7th 2024, 8:27 am
image

 

பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி அலுவலகங்கள் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக மதிய உணவு வழங்குவதை விநியோகஸ்தர்க நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பணம் கிடைக்கும் வரை உணவு வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், ஆனால் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் நோக்கில் இம்முறை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வலயக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அரசியல் தொடர்பினை கொண்டுள்ள சில அதிகாரிகள், பணம் இருந்தும் வழங்காது விநியோகஸ்தர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.

பாடசாலை மதிய உணவு விநியோகத்தில் சிக்கல்; கல்வி அமைச்சு எடுத்த அதிரடி தீர்மானம்  பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி அலுவலகங்கள் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக மதிய உணவு வழங்குவதை விநியோகஸ்தர்க நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், பணம் கிடைக்கும் வரை உணவு வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த காலங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், ஆனால் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் நோக்கில் இம்முறை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.வலயக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அரசியல் தொடர்பினை கொண்டுள்ள சில அதிகாரிகள், பணம் இருந்தும் வழங்காது விநியோகஸ்தர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement