• May 09 2024

வடக்கிலுள்ள இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள்..! ஆளுநரின் அதிரடி உத்தரவு! samugammedia

Chithra / Nov 21st 2023, 12:24 pm
image

Advertisement


வடமாகாணத்தில் உள்ள இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது வட மாகாணத்தில் மாணவர்கள் இடைவிலகல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டுமெனவும், சுமார் 25 வீதமான பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவைப்படுவதாகவும் கல்வித்துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல், வீட்டு வன்முறைகளுக்கு ஆளாகுதல், சிறுவர் தொழிலாளர்களாக மாற்றப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆளுநரிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

வடக்கிலுள்ள இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள். ஆளுநரின் அதிரடி உத்தரவு samugammedia வடமாகாணத்தில் உள்ள இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது வட மாகாணத்தில் மாணவர்கள் இடைவிலகல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டுமெனவும், சுமார் 25 வீதமான பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவைப்படுவதாகவும் கல்வித்துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.அத்துடன் மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தனர்.மேலும் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல், வீட்டு வன்முறைகளுக்கு ஆளாகுதல், சிறுவர் தொழிலாளர்களாக மாற்றப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆளுநரிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement