• May 17 2024

கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்! samugammedia

Chithra / May 5th 2023, 9:55 am
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 ஆகும், இது நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இரவு 10.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்தனர் மற்றும் விமானம் நேற்று இரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

குறித்த விமானத்தின் பயணிகள் மற்றும் ஊழியர்களை பேருந்துகள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-104 நேற்று இரவு 10.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சூழவுள்ள மோசமான காலநிலை காரணமாக இந்த விமானம் இன்று அதிகாலை 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த நிலையில் விமானத்தில் இருந்த பயணிகளும் விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை.

ஆனால் அதன் பின்னர் சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் காலநிலை சீரடைந்த நிலையில் இந்த விமானம் மீண்டும் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 01.51 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.


கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல் samugammedia கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதலாவது விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 ஆகும், இது நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இரவு 10.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்தனர் மற்றும் விமானம் நேற்று இரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.குறித்த விமானத்தின் பயணிகள் மற்றும் ஊழியர்களை பேருந்துகள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-104 நேற்று இரவு 10.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சூழவுள்ள மோசமான காலநிலை காரணமாக இந்த விமானம் இன்று அதிகாலை 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த நிலையில் விமானத்தில் இருந்த பயணிகளும் விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை.ஆனால் அதன் பின்னர் சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் காலநிலை சீரடைந்த நிலையில் இந்த விமானம் மீண்டும் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 01.51 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Advertisement

Advertisement

Advertisement