நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 178,613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 112,963 நபர்கள் வாடகை வீடுகளிலும் 10,755 குடும்பங்களைச் சேர்ந்த 34,133 நபர்கள் வாடகை அறைகளிலும் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 178,613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 112,963 நபர்கள் வாடகை வீடுகளிலும் 10,755 குடும்பங்களைச் சேர்ந்த 34,133 நபர்கள் வாடகை அறைகளிலும் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது