• May 19 2024

சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு- கிழக்கு ஆளுநர் நடவடிக்கை..!samugammedia

Sharmi / May 3rd 2023, 12:20 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் சர்வதேச சந்தையை அடைவதற்காக இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சபை இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

மாகாண திட்டமிடல் திணைக்களமும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனமும் இணைந்து விசேட குழுவொன்றை உருவாக்கி அந்த இலக்குகளை அடைய உதவுவதாக அவர் கூறினார். அதன்படி, சம்பந்தப்பட்ட தொழில்முனைவோருக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் முடிக்கப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் நிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தேவையான ஆதரவு இதன் மூலம் வழங்கப்படும்.

திருகோணமலை மாவட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை இனங்கண்டு அவற்றின் உற்பத்திகளை சந்தைக்கு வெளியிடும் திறன் குறித்து இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த செயலமர்வில் செவ்வாய்க்கிழமை (2)  கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனங்காணப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு ஏற்றுமதி பொருட்கள் தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குமாறும், 03 மாதங்களுக்குள் அவர்களின் உற்பத்திகள் அடங்கிய கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இக்கண்காட்சியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த மூன்று தொழில்முயற்சியாளர்கள் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் வெளிநாட்டில் இடம்பெறவுள்ள கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் மரிக்கார், அந்த அமைப்பின் நிறைவேற்று முகாமையாளர் திலினி கம்லத்கே, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சலுகா தினேந்திரா, ஊடக செயலாளர் ருசிர திலான் மதுசங்க, ஆளுநரின் உதவி செயலாளர் ஏ.ஜி.தேவேந்திரன் மற்றும் மற்றவர்கள் உடனிருந்தனர்.


சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு- கிழக்கு ஆளுநர் நடவடிக்கை.samugammedia திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் சர்வதேச சந்தையை அடைவதற்காக இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சபை இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.மாகாண திட்டமிடல் திணைக்களமும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனமும் இணைந்து விசேட குழுவொன்றை உருவாக்கி அந்த இலக்குகளை அடைய உதவுவதாக அவர் கூறினார். அதன்படி, சம்பந்தப்பட்ட தொழில்முனைவோருக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் முடிக்கப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் நிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தேவையான ஆதரவு இதன் மூலம் வழங்கப்படும்.திருகோணமலை மாவட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை இனங்கண்டு அவற்றின் உற்பத்திகளை சந்தைக்கு வெளியிடும் திறன் குறித்து இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த செயலமர்வில் செவ்வாய்க்கிழமை (2)  கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இனங்காணப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு ஏற்றுமதி பொருட்கள் தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குமாறும், 03 மாதங்களுக்குள் அவர்களின் உற்பத்திகள் அடங்கிய கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.இக்கண்காட்சியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த மூன்று தொழில்முயற்சியாளர்கள் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் வெளிநாட்டில் இடம்பெறவுள்ள கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் மரிக்கார், அந்த அமைப்பின் நிறைவேற்று முகாமையாளர் திலினி கம்லத்கே, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சலுகா தினேந்திரா, ஊடக செயலாளர் ருசிர திலான் மதுசங்க, ஆளுநரின் உதவி செயலாளர் ஏ.ஜி.தேவேந்திரன் மற்றும் மற்றவர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement