திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்றையதினம்(30) நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு திருகோணமலை தலைமைப் பொலிசாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இன்றையதினம்(30) திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிராக திருகோணமலை தலைமைப் பொலிசாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவு. திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்றையதினம்(30) நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு திருகோணமலை தலைமைப் பொலிசாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இன்றையதினம்(30) திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிராக திருகோணமலை தலைமைப் பொலிசாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.