• Apr 01 2025

மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Tamil nila / Nov 23rd 2024, 7:20 am
image

முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, கதிரவெளி உள்ளிட்ட கிராமங்களில் முன்னறிவிப்பின்றி நாளாந்தம் பல சந்தர்ப்பங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.


மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, கதிரவெளி உள்ளிட்ட கிராமங்களில் முன்னறிவிப்பின்றி நாளாந்தம் பல சந்தர்ப்பங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement