திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் கடந்த திங்கட்கிழமை(27) மாலை அடித்து நொருக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறுவர் இல்லத்திற்கு முன்னால் இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் முத்துத்தம்பி மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் திருநெல்வேலி ஊர் மக்களினால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.