• Nov 06 2024

மதுபானசாலையை முற்றுகையிட்டு 2வது நாளாக சுழற்சிமுறை போராட்டம்...!

Chithra / Jun 25th 2024, 1:27 pm
image

Advertisement


மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு இன்று செவ்வாய்கிழமை (25) 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களே அதிகளவில் பங்கு பெற்றிருந்தனர். 

பொதுமக்கள் மதுபான சாலைக்கு முன்னாள் நின்று சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் மதுபானசாலை தொடர்ந்தும் திறந்தே காணப்படுகின்றது.

அத்தோடு மதுபான சாலைக்கு மதுபானம் வாங்க வருவோரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதன்போது குறித்த மதுபான சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேர்தல் காலங்களில் தம்மை தேடிவரும் அரசியல்வாதிகள் தமது போராட்ட களத்திற்கு வருகை தந்து பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவில்லையெனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

அத்தோடு குறித்த இடத்தில் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முனைந்த போதும் அவ்விடம் வந்த பொலிஸார் முரண்பாடுகள் ஏற்படாத வகைமில் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். 

நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமான எதிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்ந்தும் சுழற்சிமுறையில்  முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் மதுபான சாலையை நிரந்தரமாக மூடும் வரை சுழற்சி முறையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.  


மதுபானசாலையை முற்றுகையிட்டு 2வது நாளாக சுழற்சிமுறை போராட்டம். மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு இன்று செவ்வாய்கிழமை (25) 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களே அதிகளவில் பங்கு பெற்றிருந்தனர். பொதுமக்கள் மதுபான சாலைக்கு முன்னாள் நின்று சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும் மதுபானசாலை தொடர்ந்தும் திறந்தே காணப்படுகின்றது.அத்தோடு மதுபான சாலைக்கு மதுபானம் வாங்க வருவோரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.இதன்போது குறித்த மதுபான சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.தேர்தல் காலங்களில் தம்மை தேடிவரும் அரசியல்வாதிகள் தமது போராட்ட களத்திற்கு வருகை தந்து பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவில்லையெனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.அத்தோடு குறித்த இடத்தில் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முனைந்த போதும் அவ்விடம் வந்த பொலிஸார் முரண்பாடுகள் ஏற்படாத வகைமில் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமான எதிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்ந்தும் சுழற்சிமுறையில்  முன்னெடுக்கப்படுகின்றது.இவ் மதுபான சாலையை நிரந்தரமாக மூடும் வரை சுழற்சி முறையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement