ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு திருகோணமலை பட்டணமும் சூழலும் கோட்டத்தில் உள்ள பட்டணத் தெரு, வீரநகர், திருக்கடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 1930/= ரூபா வீதம் ஆற்றல் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் இன்று (18) விக்கினேஸ்வரா, புனித சவேரியார் மற்றும் நாமகள் பாடசாலைகளில் வைத்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
இந் நூல்களை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இதில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருமலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி நூல்கள் வழங்கிவைப்பு. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு திருகோணமலை பட்டணமும் சூழலும் கோட்டத்தில் உள்ள பட்டணத் தெரு, வீரநகர், திருக்கடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 1930/= ரூபா வீதம் ஆற்றல் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் இன்று (18) விக்கினேஸ்வரா, புனித சவேரியார் மற்றும் நாமகள் பாடசாலைகளில் வைத்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் வழங்கப்பட்டது.இந் நூல்களை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.இதில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.