• Nov 17 2024

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம்: செப்டெம்பர் 6 ஆம் திகதி விவாதம்- கட்சித் தலைவர்கள் இன்று முடிவு!

Tamil nila / Aug 2nd 2024, 6:38 pm
image

மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் சட்டத்துக்கு அமைவாக நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்காக எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்வது என இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு வழி செய்யும் விதத்தில் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றுவது என்று சுமந்திரன் எம்.பியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே பேச்சு நடத்தி முடிவு செய்தமைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தை இம்மாதம் 22, 23ஆம் திகதிகளில் நடத்தச் சுமந்திரன் எம்.பி. கோரியிருந்த போதிலும, வேறு முற்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத்துக்கு இருப்பதினால், அது அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமானால், அது நிறைவேறிய நாளிலிருந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் சுதந்திர தேர்தல்கள் ஆணையத்துக்கு வந்து விடும். ஆகையால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, மாகாண சபைத் தேர்தலுக்கான அழைப்பைத் தேர்தல் ஆணையம் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீண்டகாலமாக நடைபெறாமல் தடைப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் நடைபெறக்கூடிய வாய்ப்பு இந்தச் சட்டமூலம் நிறைவேறும்போது கிட்டும் என எதிர்பார்க்கலாம்.

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம்: செப்டெம்பர் 6 ஆம் திகதி விவாதம்- கட்சித் தலைவர்கள் இன்று முடிவு மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் சட்டத்துக்கு அமைவாக நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்காக எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்வது என இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு வழி செய்யும் விதத்தில் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு வருகின்றது.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றுவது என்று சுமந்திரன் எம்.பியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே பேச்சு நடத்தி முடிவு செய்தமைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.இந்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தை இம்மாதம் 22, 23ஆம் திகதிகளில் நடத்தச் சுமந்திரன் எம்.பி. கோரியிருந்த போதிலும, வேறு முற்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத்துக்கு இருப்பதினால், அது அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.திட்டமிட்டபடி இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமானால், அது நிறைவேறிய நாளிலிருந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் சுதந்திர தேர்தல்கள் ஆணையத்துக்கு வந்து விடும். ஆகையால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, மாகாண சபைத் தேர்தலுக்கான அழைப்பைத் தேர்தல் ஆணையம் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நீண்டகாலமாக நடைபெறாமல் தடைப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் நடைபெறக்கூடிய வாய்ப்பு இந்தச் சட்டமூலம் நிறைவேறும்போது கிட்டும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement