மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற கொக்கி போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையானது முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியானது யாழ்ப்பாணக் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. 20 வயதின் கீழ் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஏழு பாடசாலைகளின் அணிகள் பங்கு பற்றின.
இதன்போது வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்திற்கும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. அந்தவகையில் 2:1 என்ற எண்ணிக்கை அடிப்படையில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தை வீழ்த்தி பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை முதலிடம் பெற்றது.
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணிக்கான பயிற்றுவிப்பாளராக செல்வி பிந்துசா பிரபாகரன் அவர்கள் கடமை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்ட கொக்கிப் போட்டி- பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை சாதனை மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற கொக்கி போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையானது முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த இறுதிப் போட்டியானது யாழ்ப்பாணக் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. 20 வயதின் கீழ் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஏழு பாடசாலைகளின் அணிகள் பங்கு பற்றின.இதன்போது வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்திற்கும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. அந்தவகையில் 2:1 என்ற எண்ணிக்கை அடிப்படையில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தை வீழ்த்தி பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை முதலிடம் பெற்றது.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணிக்கான பயிற்றுவிப்பாளராக செல்வி பிந்துசா பிரபாகரன் அவர்கள் கடமை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.