• Apr 27 2024

போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி..! மஹிந்தவும் ஆதரவு..!samugammedia

Sharmi / May 29th 2023, 2:09 pm
image

Advertisement

"உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்படவேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்."என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரித்தார்.

1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உயிரிழந்த அனைவரது நினைவாகவும் பொதுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

'போர்க்காலத்தில் இறந்தவர்களுக்காக பொதுத் தூபி அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை வரவேற்கின்றேன்.

இந்தப் பொதுத் தூபி இன நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகின்றேன். இதனை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது.

அதேவேளை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதும் தவிர்க்கப்படவேண்டும்." என்றார்.

போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி. மஹிந்தவும் ஆதரவு.samugammedia "உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்படவேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்."என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரித்தார்.1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உயிரிழந்த அனைவரது நினைவாகவும் பொதுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,'போர்க்காலத்தில் இறந்தவர்களுக்காக பொதுத் தூபி அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை வரவேற்கின்றேன். இந்தப் பொதுத் தூபி இன நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகின்றேன். இதனை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. அதேவேளை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதும் தவிர்க்கப்படவேண்டும்." என்றார்.

Advertisement

Advertisement

Advertisement