• May 22 2024

"அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ! samugammedia

Tamil nila / Jun 27th 2023, 11:01 pm
image

Advertisement

"அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை அளவில் செங்கலடி பிரதான வீதியில் இருந்து பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை பேரணியாக கையில் பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர்.



பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், செங்கலடி பிரதேச செயலக நுழைவாயிலின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், "அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரியும் முறையற்ற பட்டியல் தயாரிப்பை மீள் பரிசீலனை செய்யக்கோரியும் சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

இதேவேளை சுமார் அரை மணி நேரமாகியும் அதிகாரிகள் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தரவில்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து   பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

இதன் போது வருகை தந்த செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச செயலாளர் திருமதி. நிருத்தா பிருந்தன் அவர்களிடம் தமது பிரச்சினைகளை தெரிவித்தனர்.


"அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம் samugammedia "அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று காலை அளவில் செங்கலடி பிரதான வீதியில் இருந்து பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை பேரணியாக கையில் பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர்.பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், செங்கலடி பிரதேச செயலக நுழைவாயிலின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், "அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரியும் முறையற்ற பட்டியல் தயாரிப்பை மீள் பரிசீலனை செய்யக்கோரியும் சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேவேளை சுமார் அரை மணி நேரமாகியும் அதிகாரிகள் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தரவில்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து   பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது வருகை தந்த செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச செயலாளர் திருமதி. நிருத்தா பிருந்தன் அவர்களிடம் தமது பிரச்சினைகளை தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement