• May 17 2024

டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை! samugammedia

Chithra / May 4th 2023, 1:04 pm
image

Advertisement

புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் டெங்குவிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்தத் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களை கட்டுப்படுத்த டெங்கு செயலணியை செயற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை samugammedia புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் டெங்குவிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்தத் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.இதேவேளை, மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களை கட்டுப்படுத்த டெங்கு செயலணியை செயற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement