• May 17 2024

உயர்தர பெறுபேறுகள் வெளியீடு; 63% ஆனோர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி – 84 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் samugammedia

Chithra / Sep 4th 2023, 8:53 pm
image

Advertisement

2022 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

http://www.doenets.lk அல்லது http://www.results.exams.gov.lk ஆகிய இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

2022 க.பொ.த உயர்தர பரீட்சைகள், 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை இடம்பெற்றது.

அதற்கமைய இப்பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 2263,933 ஆகும்.

பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 232,797 ஆகும்.

பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 31,136 ஆகும்.

அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 149,487 ஆகும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 17,451 ஆகும்.

அதன்படி, 2022 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 166,938 ஆகும்.

இது மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 63.3% ஆகும்.

பெறுபேறு இடைநிறுத்தப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 84 ஆகும்.

இதில், பெறுபேறு இடைநிறுத்தப்பட்ட பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 59 ஆகும்.

பெறுபேறு இடைநிறுத்தப்பட்ட தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 25 ஆகும்.

பெறுபேறுகள் வெளியான 24 மணி நேரத்திற்குள், அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அதிபர்களும் அந்தந்த பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய, http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று, ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்ப கொடுக்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட பெறுபேறுகளை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும், வலயப் பணிப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, http://onlineexams.gov.lk/onlineapps/index.php/welcome/onlineresults என்ற இணைப்பைப் பயன்படுத்தி, தங்கள் மாகாணம்/வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய/பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

2022 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு (2023) தோற்றிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும், 2023 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்ற விரும்பினால், http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் செப்டெம்பர் 11 முதல் 16 வரை அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீளாய்வு பெறுபேறுகள் வெளியான பின்னர், அந்தந்தப் பாடசாலைகளின் பெறுபேறு ஆவணங்கள் அந்தந்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க, செப்டெம்பர் 07 முதல் 16 வரை http://onlineexams.gov.lk/eic இணைப்பு மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும்பெறுபேறுகள் கிளை – 0112784208/ 0112786616/ 0112784537/ 0112785413

பாடசாலை பரீட்சை மதிப்பீட்டு கிளை – 0112785231/ 0112785216/ 0112784037

ஒன்லைன் பிரிவு – 0113671568

துரித இலக்கம் – 1911

மின்னஞ்சல் முகவரி: gcealexam@gmail.com

உயர்தர பெறுபேறுகள் வெளியீடு; 63% ஆனோர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி – 84 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் samugammedia 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.http://www.doenets.lk அல்லது http://www.results.exams.gov.lk ஆகிய இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.2022 க.பொ.த உயர்தர பரீட்சைகள், 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை இடம்பெற்றது.அதற்கமைய இப்பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 2263,933 ஆகும்.பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 232,797 ஆகும்.பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 31,136 ஆகும்.அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 149,487 ஆகும்.பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 17,451 ஆகும்.அதன்படி, 2022 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 166,938 ஆகும்.இது மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 63.3% ஆகும்.பெறுபேறு இடைநிறுத்தப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 84 ஆகும்.இதில், பெறுபேறு இடைநிறுத்தப்பட்ட பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 59 ஆகும்.பெறுபேறு இடைநிறுத்தப்பட்ட தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 25 ஆகும்.பெறுபேறுகள் வெளியான 24 மணி நேரத்திற்குள், அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.அனைத்து அதிபர்களும் அந்தந்த பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய, http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று, ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்ப கொடுக்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட பெறுபேறுகளை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும், வலயப் பணிப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, http://onlineexams.gov.lk/onlineapps/index.php/welcome/onlineresults என்ற இணைப்பைப் பயன்படுத்தி, தங்கள் மாகாணம்/வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய/பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.2022 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு (2023) தோற்றிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும், 2023 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்ற விரும்பினால், http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் செப்டெம்பர் 11 முதல் 16 வரை அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மீளாய்வு பெறுபேறுகள் வெளியான பின்னர், அந்தந்தப் பாடசாலைகளின் பெறுபேறு ஆவணங்கள் அந்தந்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க, செப்டெம்பர் 07 முதல் 16 வரை http://onlineexams.gov.lk/eic இணைப்பு மூலம் விண்ணப்பிக்க முடியும்.மேலதிக விபரங்களுக்கு:பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும்பெறுபேறுகள் கிளை – 0112784208/ 0112786616/ 0112784537/ 0112785413பாடசாலை பரீட்சை மதிப்பீட்டு கிளை – 0112785231/ 0112785216/ 0112784037ஒன்லைன் பிரிவு – 0113671568துரித இலக்கம் – 1911மின்னஞ்சல் முகவரி: gcealexam@gmail.com

Advertisement

Advertisement

Advertisement