• Apr 28 2024

புடினின் புதிய திட்டம்..! குவிக்கப்படும் அணு ஆயுதங்கள் - பீதியில் மேற்கத்திய நாடுகள்..! samugammedia

Chithra / Jun 11th 2023, 3:01 pm
image

Advertisement

பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணு ஆயுதங்கள் குவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர்  தெரிவித்துள்ளமை மேற்கத்திய நாடுகள் இடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

அதிபர்  புடின் பெலாரஸ் அதிபர்  அலெக்ஸாண்டரை  சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 

அதன் போது,  ஜூலை 7 ஆம் திகதி அல்லது  ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னதாக  பெலாரஸில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டட  வேலைகள் நிறைவடைந்து விடும் என்றும் அதன் பின்னர்  உடனடியாக அணு ஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

இவரின்  இந்த அறிவிப்பின் பின்னர், மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தவே  ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பெலாரஸ் அதிபரும் உடந்தையாக உள்ளதாக  என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.


புடினின் புதிய திட்டம். குவிக்கப்படும் அணு ஆயுதங்கள் - பீதியில் மேற்கத்திய நாடுகள். samugammedia பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணு ஆயுதங்கள் குவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர்  தெரிவித்துள்ளமை மேற்கத்திய நாடுகள் இடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. அதிபர்  புடின் பெலாரஸ் அதிபர்  அலெக்ஸாண்டரை  சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதன் போது,  ஜூலை 7 ஆம் திகதி அல்லது  ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னதாக  பெலாரஸில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டட  வேலைகள் நிறைவடைந்து விடும் என்றும் அதன் பின்னர்  உடனடியாக அணு ஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.இவரின்  இந்த அறிவிப்பின் பின்னர், மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தவே  ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.அத்துடன் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பெலாரஸ் அதிபரும் உடந்தையாக உள்ளதாக  என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement