தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா மூதூர்-மணற்சேனை பகுதியில் இன்று(11) காலை மிக சிறப்பாக இடம் பெற்றது.
இதனை, மூதூர் மணற்சேனை சிறி சித்தி விநாயகர் ஆலய நிர்வாகமும், கிராம மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது மாட்டு வண்டில்கள் சோடனை செய்யப்பட்டு பவணியாக நெற்கதிர் இடம்பெறும் இடத்திற்குச் சென்றதுடன், அவ்விடத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்பின்னர் நெல் அறுவடை இடம்பெற்றதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து மாட்டு வண்டில்களில் ஏறி மீண்டும் கோயிலுக்கு வருகை தந்தனர்.
இதனிடையே, பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ் புதிர் அறுவடை விழாவில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தைப்பூசத்தினை முன்னிட்டு மூதூரில் புதிர் அறுவடை விழா. தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா மூதூர்-மணற்சேனை பகுதியில் இன்று(11) காலை மிக சிறப்பாக இடம் பெற்றது.இதனை, மூதூர் மணற்சேனை சிறி சித்தி விநாயகர் ஆலய நிர்வாகமும், கிராம மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது மாட்டு வண்டில்கள் சோடனை செய்யப்பட்டு பவணியாக நெற்கதிர் இடம்பெறும் இடத்திற்குச் சென்றதுடன், அவ்விடத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இதன்பின்னர் நெல் அறுவடை இடம்பெற்றதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து மாட்டு வண்டில்களில் ஏறி மீண்டும் கோயிலுக்கு வருகை தந்தனர்.இதனிடையே, பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ் புதிர் அறுவடை விழாவில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.