உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து உலககோப்பை போட்டிகள் கட்டார் நாட்டில் நடந்து வருகிறது.
கால்பந்து போட்டியை வரவேற்கவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் புதுச்சேரி பிரபல சைவ உணவகத்தில் பிபா இட்லி என்ற கால்பந்து இட்லி வழங்கப்படுகிறது.
90 ரூபாவுக்கு விற்கப்படும் இட்லியை கால்பந்தாட்ட ரசிகர்கள் ருசித்து வருகின்றனர். பிபா இட்லி புதுச்சேரி மக்களிடம் பிரபலமாகி வருகிறது.