அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தொடர்ந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் மேல்நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.
இது தொடர்பாக குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் திகதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்ததுடன் பிணையும் வழங்கினார்.
ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு குறித்த ஆட்சேபனைகளை வழங்க மனுதாரர் புர்னேஷ் மோடிக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று (20) விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தண்டனையை நிறுத்தக் கோரிய ராகுல் காந்தியின் மேன்முறையீடு நிராகரிப்பு samugammedia அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தொடர்ந்தும் நீக்கப்பட்டுள்ளார்.இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் மேல்நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்" என்று விமர்சித்தார்.இது தொடர்பாக குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் திகதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.இதையடுத்து, ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்ததுடன் பிணையும் வழங்கினார்.ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு குறித்த ஆட்சேபனைகளை வழங்க மனுதாரர் புர்னேஷ் மோடிக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று (20) விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.