• Oct 24 2026

விசுவமடுவில் மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு!

Ziya / Oct 23rd 2026, 2:47 pm
image

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


புதிய கிராம மக்கள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், நேற்று (22) விசுவமடு அட்டைக்குள சிறுவர் பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது.


அமெரிக்காவில் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவி  இந்திராணி நித்தியானந்தனின் நிதிப் பங்களிப்புடன், மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் குறைத்து, பாடசாலைக்குச் செல்வதற்கும் தமது கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதற்கும் உதவும் வகையில் இந்த மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன், புதிய கிராம மக்கள் மகளிர் அணியின் புதுக்குடியிருப்பு பிரதேச இணைப்பாளர் திருமதி தீபன் அனஸ்ரியா, தேராவில் தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள், மகளிர் அணியினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விசுவமடுவில் மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.புதிய கிராம மக்கள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், நேற்று (22) விசுவமடு அட்டைக்குள சிறுவர் பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது.அமெரிக்காவில் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவி  இந்திராணி நித்தியானந்தனின் நிதிப் பங்களிப்புடன், மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் குறைத்து, பாடசாலைக்குச் செல்வதற்கும் தமது கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதற்கும் உதவும் வகையில் இந்த மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன், புதிய கிராம மக்கள் மகளிர் அணியின் புதுக்குடியிருப்பு பிரதேச இணைப்பாளர் திருமதி தீபன் அனஸ்ரியா, தேராவில் தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள், மகளிர் அணியினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement