• May 22 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ஷர்களுக்கு தொடர்பில்லை – கொந்தளிக்கும் சகாக்கள்! samugammedia

Tamil nila / Sep 6th 2023, 6:42 am
image

Advertisement

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ஸக்களுக்கு தேவையற்றது என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Channel 4 தொலைக்காட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  வௌியிடவுள்ள ஆவணம் குறித்தே அவர் இதனை தெரிவித்தார்.

Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி  ஔிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னுரையை Channel 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஊடகப்பேச்சாளர் மற்றும் நிதி பரிபாலகராக செயற்பட்டதாகக் கூறப்படும் ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரும் மற்றுமொரு அரச உயரதிகாரி ஒருவரும் வாக்குமூலமளிக்கும் வகையில், இந்த முன்னுரை காணொளி அமைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளதாக ஹன்சீர் அசாத் மௌலானா இதில் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சீர்குலைத்து ராஜபக்ஸவை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரிக்கும் நோக்கில், 2018 ஆம் ஆண்டு உயர் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, ISIS-உடன் இணைந்த குண்டுதாரிகள் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக அதில் மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ஷர்களுக்கு தொடர்பில்லை – கொந்தளிக்கும் சகாக்கள் samugammedia அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ஸக்களுக்கு தேவையற்றது என தெரிவிக்கப்படுகின்றது.பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Channel 4 தொலைக்காட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  வௌியிடவுள்ள ஆவணம் குறித்தே அவர் இதனை தெரிவித்தார்.Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி  ஔிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னுரையை Channel 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதுதற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஊடகப்பேச்சாளர் மற்றும் நிதி பரிபாலகராக செயற்பட்டதாகக் கூறப்படும் ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரும் மற்றுமொரு அரச உயரதிகாரி ஒருவரும் வாக்குமூலமளிக்கும் வகையில், இந்த முன்னுரை காணொளி அமைந்துள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளதாக ஹன்சீர் அசாத் மௌலானா இதில் தெரிவித்துள்ளார்.இலங்கையை சீர்குலைத்து ராஜபக்ஸவை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரிக்கும் நோக்கில், 2018 ஆம் ஆண்டு உயர் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, ISIS-உடன் இணைந்த குண்டுதாரிகள் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக அதில் மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement