• Apr 25 2025

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்

Chithra / Apr 25th 2025, 1:14 pm
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

எனினும், வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க 28 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க 28 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement