• Apr 25 2025

கிண்ணியாவில் இரண்டாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு..!

Sharmi / Apr 25th 2025, 1:49 pm
image

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரு உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தபால் மூலமான வாக்களிப்பு, இரண்டாவது நாளாகவும் இன்று(24) காலை ஆரம்பமானது.

கிண்ணியா வலய கல்வி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றில், காலை 08.30 மணிக்கு, சுமுகமான முறையில் வாக்களிப்பு ஆரம்பமானது. 

இதன்போது நேற்று வாக்களிக்காத அரச ஊழியர்கள் இன்று ஆர்வத்துடன் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது. 

கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 9 அரசியல் கட்சிகளும், பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 11 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

கிண்ணியா நகரசபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 27630 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25154 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்தும் மொத்தமாக136 உறுப்பினர்கள் தெரிவு  செய்யப்படவுள்ளனர். 

இதற்காக இம்மாவட்டத்தில் 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிண்ணியாவில் இரண்டாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு. கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரு உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தபால் மூலமான வாக்களிப்பு, இரண்டாவது நாளாகவும் இன்று(24) காலை ஆரம்பமானது.கிண்ணியா வலய கல்வி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றில், காலை 08.30 மணிக்கு, சுமுகமான முறையில் வாக்களிப்பு ஆரம்பமானது. இதன்போது நேற்று வாக்களிக்காத அரச ஊழியர்கள் இன்று ஆர்வத்துடன் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது. கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 9 அரசியல் கட்சிகளும், பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 11 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.கிண்ணியா நகரசபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 27630 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25154 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்தும் மொத்தமாக136 உறுப்பினர்கள் தெரிவு  செய்யப்படவுள்ளனர். இதற்காக இம்மாவட்டத்தில் 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement