• Apr 25 2025

தலதா வழிபாடு குறித்து மக்களுக்கு விசேட அறிவிப்பு - பலியாகும் உயிர்கள்

Chithra / Apr 25th 2025, 2:24 pm
image


ஸ்ரீதலதா வழிபாட்டிற்காக எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய பக்தர்களை இணைத்துக் கொள்ள மாட்டோம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஸ்ரீதலதா வழிபாட்டிற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் இதில் பங்கேற்க வேண்டாம் என தலதா வழிபாட்டுக் குழு அறிவித்திருந்தது.

இருப்பினும், தற்போது வரிசையில் உள்ள பக்தர்களுக்கு வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 4 இலட்சம் பக்தர்கள் வரிசையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது வரிசையில் உள்ளவர்கள் சிறி தலதா வழிபாட்டினை நிறைவு செய்வதற்கு,  27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஆகும் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பக்தர்கள் சிறி தலதா வழிபாட்டிற்காக கண்டியை நோக்கி வர வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருவேளை வழிபட வாய்ப்பு கிடைத்தால், அதுகுறித்து நாளை (26) மாலை அல்லது 27 ஆம் திகதி காலை அறிவிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை  கண்டியில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில்  பணியில் இருந்தபோது இரண்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

மாரடைப்பு காரணமாக அதிகாரிகள் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலதா வழிபாடு குறித்து மக்களுக்கு விசேட அறிவிப்பு - பலியாகும் உயிர்கள் ஸ்ரீதலதா வழிபாட்டிற்காக எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய பக்தர்களை இணைத்துக் கொள்ள மாட்டோம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.ஸ்ரீதலதா வழிபாட்டிற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் இதில் பங்கேற்க வேண்டாம் என தலதா வழிபாட்டுக் குழு அறிவித்திருந்தது.இருப்பினும், தற்போது வரிசையில் உள்ள பக்தர்களுக்கு வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சுமார் 4 இலட்சம் பக்தர்கள் வரிசையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்போது வரிசையில் உள்ளவர்கள் சிறி தலதா வழிபாட்டினை நிறைவு செய்வதற்கு,  27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஆகும் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில், பக்தர்கள் சிறி தலதா வழிபாட்டிற்காக கண்டியை நோக்கி வர வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒருவேளை வழிபட வாய்ப்பு கிடைத்தால், அதுகுறித்து நாளை (26) மாலை அல்லது 27 ஆம் திகதி காலை அறிவிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை  கண்டியில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில்  பணியில் இருந்தபோது இரண்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .மாரடைப்பு காரணமாக அதிகாரிகள் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement