ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் களுத்துறை தெற்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை ஹென்டியங்கல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், சம்பவத்தன்று வீடு மற்றும் வீட்டு காணிக்குள் நுழைந்து, சொத்துக்களை திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது. samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் களுத்துறை தெற்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை ஹென்டியங்கல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர், சம்பவத்தன்று வீடு மற்றும் வீட்டு காணிக்குள் நுழைந்து, சொத்துக்களை திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.