• Nov 15 2024

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம்: தலதா அத்துகோரள, ரிஷாட் சென்றமை குறித்து சர்ச்சை!

Chithra / Aug 1st 2024, 8:25 am
image


ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இருவேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஒரு நிகழ்வும், வெளிநாட்டு நிறுவனம் நடத்திய நிகழ்வும் ஒரே ஹோட்டலில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட நிகழ்விற்கு, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண, ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹோட்டலில் இருந்து வெளியில் வந்த காட்சிகள் ஊடகவியலாளர்களினால் ஒளிபதிவு செய்யப்பட்டதுடன், அவர்களிடம் கேள்வியும் எழுப்பப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவிடம் ஊடகவியலாளர்கள், இதன்போது கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

“நான் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்தேன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் கூட்டத்துடன் நான் ஒருபோதும் இருக்கவில்லை. மலிவாக நடந்து கொள்ளாதீர்கள், 

ஜனாதிபதியுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த காலங்களில் அவருடன் பேசி இருக்கிறேன். இன்றும் அதைச் செய்வேன், நாளையும் அப்படித்தான் இருக்கும்” என  அவர் கூறினார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக வருகைத் தந்த ரிஷாட் பதியூதீனிடமும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“வர்த்தகம் மற்றும் நிவாரணங்கள், நிதிநிலைமைகளைக் கையாளுதல்  தொடர்பிலான இந்த மகாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள்  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். 

என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

எமது இந்தக் கலந்துரையாடல் குறித்த ஹோட்டலின் 2 ஆவது தளத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், அதே  ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் சந்திக்கவில்லை. என்மீதும் எமது கட்சி மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களே  இவ்வாறு  வதந்தியை பரப்புகின்றனர்” என ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம்: தலதா அத்துகோரள, ரிஷாட் சென்றமை குறித்து சர்ச்சை ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.பத்தரமுல்லையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இருவேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஒரு நிகழ்வும், வெளிநாட்டு நிறுவனம் நடத்திய நிகழ்வும் ஒரே ஹோட்டலில் இடம்பெற்றுள்ளன.வெளிநாட்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட நிகழ்விற்கு, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண, ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹோட்டலில் இருந்து வெளியில் வந்த காட்சிகள் ஊடகவியலாளர்களினால் ஒளிபதிவு செய்யப்பட்டதுடன், அவர்களிடம் கேள்வியும் எழுப்பப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவிடம் ஊடகவியலாளர்கள், இதன்போது கேள்விகளை எழுப்பியிருந்தனர்.“நான் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்தேன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் கூட்டத்துடன் நான் ஒருபோதும் இருக்கவில்லை. மலிவாக நடந்து கொள்ளாதீர்கள், ஜனாதிபதியுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த காலங்களில் அவருடன் பேசி இருக்கிறேன். இன்றும் அதைச் செய்வேன், நாளையும் அப்படித்தான் இருக்கும்” என  அவர் கூறினார்.இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக வருகைத் தந்த ரிஷாட் பதியூதீனிடமும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.“வர்த்தகம் மற்றும் நிவாரணங்கள், நிதிநிலைமைகளைக் கையாளுதல்  தொடர்பிலான இந்த மகாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள்  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.எமது இந்தக் கலந்துரையாடல் குறித்த ஹோட்டலின் 2 ஆவது தளத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், அதே  ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் சந்திக்கவில்லை. என்மீதும் எமது கட்சி மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களே  இவ்வாறு  வதந்தியை பரப்புகின்றனர்” என ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement