• Nov 24 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்! எதிர்க்கட்சி வெளியிட்ட பரபரப்புத் தகவல்

Chithra / Dec 27th 2023, 12:16 pm
image


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 16 மற்றும் ஒக்டோபர் 16 ஆம் திகதிகளுக்கு இடையில் நடைபெறும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்க மாட்டார்.

இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அவர், 2016 இல், மற்றொரு இழப்பை எதிர்பார்த்து, பொது வேட்பாளரை பரிந்துரைத்தார். அந்த வெற்றியில் ஆட்சியைப் பிடித்தார்.

எவ்வாறாயினும் இந்த முறை அவர் அதிஷ்டத்தால் மட்டுமே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேரா தெரிவு செய்யப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்த கட்சியுடன் கீழ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முயற்சித்தாலும் நிச்சயம் தோல்வியை சந்திக்க நேரிடும்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் ரணில் விக்கிரமசிங்க போன்ற வயதான அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 

65 வயதிற்குட்பட்ட புதிய ஜனாதிபதியை நாடு தெரிவு செய்யும்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார் எதிர்க்கட்சி வெளியிட்ட பரபரப்புத் தகவல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 16 மற்றும் ஒக்டோபர் 16 ஆம் திகதிகளுக்கு இடையில் நடைபெறும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்க மாட்டார்.இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அவர், 2016 இல், மற்றொரு இழப்பை எதிர்பார்த்து, பொது வேட்பாளரை பரிந்துரைத்தார். அந்த வெற்றியில் ஆட்சியைப் பிடித்தார்.எவ்வாறாயினும் இந்த முறை அவர் அதிஷ்டத்தால் மட்டுமே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேரா தெரிவு செய்யப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்த கட்சியுடன் கீழ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முயற்சித்தாலும் நிச்சயம் தோல்வியை சந்திக்க நேரிடும்.நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் ரணில் விக்கிரமசிங்க போன்ற வயதான அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 65 வயதிற்குட்பட்ட புதிய ஜனாதிபதியை நாடு தெரிவு செய்யும்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement