• Apr 27 2024

மக்கள் ஆணையில்லாத ரணில்...! நாட்டை அதிகாரப் போட்டிக்குள் தள்ளிவிடுவதற்கு முயற்சி...! வசந்த முதலிகே குற்றச்சாட்டு..!samugammedia

Sharmi / Aug 26th 2023, 10:11 am
image

Advertisement

மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பெரும் அதிகாரப் போட்டிக்குள் தள்ளிவிடுவதற்கு முயற்சிக்கிறார் என மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலைக்குச்சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டியுள்ளார்.

திருகோணமலையை இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தற்போது அந்த ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்யவே முனைகிறார்.

அவர் கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார். 624 சதுர மைல் என்பது கிட்டத்தட்ட கொழும்பு மாவட்டத்திற்கு நிகரான பகுதியாகும். அதனை அவர் இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கின்றார்.

திருகோணமலையின் சுமுது கிராமத்தில் உள்ள மக்களை எந்தவித நிர்மாணங்களையும் செய்ய வேண்டாம் என்று எழுத்து மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடம் மீண்டும் அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் 144 குடும்பங்கள் உள்ளன. அவைவெளியேறவேண்டும். என்ற அடிப்படையில்தான் தற்பொழுது எழுத்து மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த மக்களைவெளியேற்றுவது தொடர்பில் நேற்றைய தீனம் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.  அது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்து வரும் நாட்களில் எடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர்மாதம் இரண்டாம் திகதி இந்தியாவினுடைய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகிறார். அவர் வருகின்ற பொழுது எண்ணெய்குழாய் வழிதிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காகவே ரணில் விக்கிமசிங்க இந்த மக்களை அவர்களின் சொந்தப்பகுதியில் இருந்து வெளியேற்ற முனைகின்றார். இதன்மூலம் மக்கள் ஆணையில்லாத அவர் அதிகாரப்போட்டியை வலுப்படுத்துகின்றார். அத்துடன் இலங்கையுடன் இந்தியா எவ்வாறு அரசியல் செய்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மக்கள் ஆணையில்லாத ரணில். நாட்டை அதிகாரப் போட்டிக்குள் தள்ளிவிடுவதற்கு முயற்சி. வசந்த முதலிகே குற்றச்சாட்டு.samugammedia மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பெரும் அதிகாரப் போட்டிக்குள் தள்ளிவிடுவதற்கு முயற்சிக்கிறார் என மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,திருகோணமலைக்குச்சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டியுள்ளார்.திருகோணமலையை இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தற்போது அந்த ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்யவே முனைகிறார்.அவர் கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார். 624 சதுர மைல் என்பது கிட்டத்தட்ட கொழும்பு மாவட்டத்திற்கு நிகரான பகுதியாகும். அதனை அவர் இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கின்றார்.திருகோணமலையின் சுமுது கிராமத்தில் உள்ள மக்களை எந்தவித நிர்மாணங்களையும் செய்ய வேண்டாம் என்று எழுத்து மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடம் மீண்டும் அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் 144 குடும்பங்கள் உள்ளன. அவைவெளியேறவேண்டும். என்ற அடிப்படையில்தான் தற்பொழுது எழுத்து மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த மக்களைவெளியேற்றுவது தொடர்பில் நேற்றைய தீனம் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.  அது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்து வரும் நாட்களில் எடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர்மாதம் இரண்டாம் திகதி இந்தியாவினுடைய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகிறார். அவர் வருகின்ற பொழுது எண்ணெய்குழாய் வழிதிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காகவே ரணில் விக்கிமசிங்க இந்த மக்களை அவர்களின் சொந்தப்பகுதியில் இருந்து வெளியேற்ற முனைகின்றார். இதன்மூலம் மக்கள் ஆணையில்லாத அவர் அதிகாரப்போட்டியை வலுப்படுத்துகின்றார். அத்துடன் இலங்கையுடன் இந்தியா எவ்வாறு அரசியல் செய்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement