• May 10 2024

ரணிலின் சூத்திரம் வெற்றியளிக்காது - கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் - எச்சரித்த கம்பன்பில! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 5:32 pm
image

Advertisement

2015 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க வாங்கிய கடன் குண்டுதான் 2020 ஆண்டில் வெடித்தாகவும் மீண்டும் கடன்களை பெற்றால் மேலும் நாடு இருளுக்குள் தள்ளப்படுமென ஆளும் கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில எச்சரிக்கை விடுக்கின்றார்.

2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும் எனத் தெரிவித்த உதய கம்பன்பில, கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செல்லவேண்டும் என முதன் முறையாக அமைச்சரவையில் தானே தெரிவித்திருந்தாகவும் ஆனால் இன்று இதற்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளதாக உதய கம்பன்பில குறிப்பிட்டுள்ளார். 

அதவாவது சர்வசே நாணய நிதியத்திடம் டொலர் பிரச்சனையை தீர்ப்பதற்கே தாம் முன்மொழிந்ததாகவும் ஆனால் தற்போது வங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ரூபா பிரச்சனையை தீர்ப்பதற்கான உடன்பாடுகளே அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உதய கம்பன்பில குறிப்பிட்டுள்ளார்.

நாடு வங்குரோத்தை அடைவதற்கு ரூபா காரணம் அல்ல என்றும் டொலர் பிரச்சனையே குறிப்பாக வெளிநாட்டு கடனை செலுத்த முடியாமையே என்றும் உதய கம்பன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கையில் டெலர் பற்றாக்குறைக்கான எந்த முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை என்று உதய கம்பன்பில குற்றம் சுமத்துகின்றார்.

2015 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த கடனை செலுத்த முடியாத காரணத்தினால் 2020 ஆண்டு பாதிக்கப்பட்டிருந்தாக உதய கம்பன்பில குறிப்பிட்டிருந்தார்.

ரணிலின் சூத்திரம் வெற்றியளிக்காது - கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் - எச்சரித்த கம்பன்பில samugammedia 2015 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க வாங்கிய கடன் குண்டுதான் 2020 ஆண்டில் வெடித்தாகவும் மீண்டும் கடன்களை பெற்றால் மேலும் நாடு இருளுக்குள் தள்ளப்படுமென ஆளும் கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில எச்சரிக்கை விடுக்கின்றார்.2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும் எனத் தெரிவித்த உதய கம்பன்பில, கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் செல்லவேண்டும் என முதன் முறையாக அமைச்சரவையில் தானே தெரிவித்திருந்தாகவும் ஆனால் இன்று இதற்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளதாக உதய கம்பன்பில குறிப்பிட்டுள்ளார். அதவாவது சர்வசே நாணய நிதியத்திடம் டொலர் பிரச்சனையை தீர்ப்பதற்கே தாம் முன்மொழிந்ததாகவும் ஆனால் தற்போது வங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ரூபா பிரச்சனையை தீர்ப்பதற்கான உடன்பாடுகளே அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உதய கம்பன்பில குறிப்பிட்டுள்ளார்.நாடு வங்குரோத்தை அடைவதற்கு ரூபா காரணம் அல்ல என்றும் டொலர் பிரச்சனையே குறிப்பாக வெளிநாட்டு கடனை செலுத்த முடியாமையே என்றும் உதய கம்பன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த உடன்படிக்கையில் டெலர் பற்றாக்குறைக்கான எந்த முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை என்று உதய கம்பன்பில குற்றம் சுமத்துகின்றார்.2015 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த கடனை செலுத்த முடியாத காரணத்தினால் 2020 ஆண்டு பாதிக்கப்பட்டிருந்தாக உதய கம்பன்பில குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement