• Nov 24 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணிலின் கட்சி..! நியமிக்கப்பட்ட புதிய பதவிகள்

Chithra / Jun 6th 2024, 10:34 am
image

 

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தல்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கட்சியின் முக்கிய நியமனங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதன்படி தேசிய தேர்தல் அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோவும் தேசிய செயலாளராக ரவி கருணாநாயக்கவும் தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக ரொனால்ட் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய குறிப்பிடத்தக்க நியமனங்களில், பிர்தௌஸ் பாரூக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிஸ்பா சத்தார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் கிரிஸான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல மூத்த உறுப்பினர்கள் தங்களின் தற்போதைய பொறுப்புகளில் தொடர்வார்கள் என்பதை கட்சியின் செயற்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கட்சிக்குள் தற்போதுள்ள பதவிகளை தொடர்வார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் இன்று காலை கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் சுபநேரத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணிலின் கட்சி. நியமிக்கப்பட்ட புதிய பதவிகள்  ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தல்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கட்சியின் முக்கிய நியமனங்கள் நிரப்பப்பட்டுள்ளன.இதன்படி தேசிய தேர்தல் அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோவும் தேசிய செயலாளராக ரவி கருணாநாயக்கவும் தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக ரொனால்ட் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏனைய குறிப்பிடத்தக்க நியமனங்களில், பிர்தௌஸ் பாரூக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மிஸ்பா சத்தார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் கிரிஸான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் பல மூத்த உறுப்பினர்கள் தங்களின் தற்போதைய பொறுப்புகளில் தொடர்வார்கள் என்பதை கட்சியின் செயற்குழு உறுதிப்படுத்தியுள்ளது.இதன்படி பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கட்சிக்குள் தற்போதுள்ள பதவிகளை தொடர்வார்கள்.இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் இன்று காலை கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியால் சுபநேரத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement