• Apr 15 2025

மீண்டும் அநுர அலையில் வீழ்ந்து தத்தழிக்காது தமிழர்கள் தெளிவுடன் செயல்பட வேண்டும்! எஸ்.ஆர்.குமரேஸ் வலியுறுத்து

Chithra / Apr 14th 2025, 11:25 am
image


சங்கு சின்னத்தை அனைவரும் ஒன்றிணைந்து பலப்படுத்துவதன் மூலம் உங்கள் கிராமத்தையும் மன்னார் நகரத்தையும் பலப்படுத்த முடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிடும் மன்னார் எழுத்தூர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் பெரியகமம் பகுதியில் நேற்று  மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீட்டுச் சின்னத்தில் நாங்கள் பல வருடங்கள் பயணம் செய்தோம். அந்த வீடு இன்று தமிழரசுக்கட்சியின் தனி சின்னம் என்பதால் அந்த வீடு இன்று தனியாக சென்று விட்டது.ஆனால் இன்று ஐந்து கட்சிகள் இணைந்து எமக்கான ஒரு பொதுச் சின்னமாக சங்கு சின்னத்தில்   பயணித்துக் கொண்டிருக்கிறோம்.நாங்கள் கூட்டமைப்பாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மன்னார் நகர சபை யை கைப்பற்றுகின்ற போதே இக்கிராமத்தையும், நகர சபைக்குட்பட்ட ஏனைய கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும்.பல்வேறு கட்சிகள் இன்று உங்களிடம் வாக்கு கேட்டு வந்து  செல்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலும், அதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு அலை காணப்பட்டது.அந்த அலையில் அனைவரும் விழுந்து என்ன செய்வது என்று இன்று தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் நீங்கள் மீண்டும் அந்த அலையில் வீழ்ந்து தத்தழிக்காது தெளிவுடன் செயல்பட வேண்டும்.

நீங்கள் எல்லாம் தமிழர்கள். எனவே தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு சென்று தேர்தல் கேட்டு வெற்றி பெற முடியுமா, முடியாது என்றார்.


மீண்டும் அநுர அலையில் வீழ்ந்து தத்தழிக்காது தமிழர்கள் தெளிவுடன் செயல்பட வேண்டும் எஸ்.ஆர்.குமரேஸ் வலியுறுத்து சங்கு சின்னத்தை அனைவரும் ஒன்றிணைந்து பலப்படுத்துவதன் மூலம் உங்கள் கிராமத்தையும் மன்னார் நகரத்தையும் பலப்படுத்த முடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிடும் மன்னார் எழுத்தூர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் பெரியகமம் பகுதியில் நேற்று  மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது.இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வீட்டுச் சின்னத்தில் நாங்கள் பல வருடங்கள் பயணம் செய்தோம். அந்த வீடு இன்று தமிழரசுக்கட்சியின் தனி சின்னம் என்பதால் அந்த வீடு இன்று தனியாக சென்று விட்டது.ஆனால் இன்று ஐந்து கட்சிகள் இணைந்து எமக்கான ஒரு பொதுச் சின்னமாக சங்கு சின்னத்தில்   பயணித்துக் கொண்டிருக்கிறோம்.நாங்கள் கூட்டமைப்பாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மன்னார் நகர சபை யை கைப்பற்றுகின்ற போதே இக்கிராமத்தையும், நகர சபைக்குட்பட்ட ஏனைய கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும்.பல்வேறு கட்சிகள் இன்று உங்களிடம் வாக்கு கேட்டு வந்து  செல்கின்றனர்.ஜனாதிபதி தேர்தலும், அதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு அலை காணப்பட்டது.அந்த அலையில் அனைவரும் விழுந்து என்ன செய்வது என்று இன்று தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் நீங்கள் மீண்டும் அந்த அலையில் வீழ்ந்து தத்தழிக்காது தெளிவுடன் செயல்பட வேண்டும்.நீங்கள் எல்லாம் தமிழர்கள். எனவே தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு சென்று தேர்தல் கேட்டு வெற்றி பெற முடியுமா, முடியாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement