• May 19 2024

யாழில், குறைந்தளவான காணியை ரணில் விடுவித்திருப்பது – வெறும் கண்துடைப்பு – விக்கி அறிக்கை!

Tamil nila / Feb 2nd 2023, 3:57 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு 197 குடும்பங்களுக்கு நாளையதினம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ள நிலையில் இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் ஆனாலும் அதனை வரவேற்பதாக 

தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு அவர் இன்று அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மிகக் குறைவான நிலத்தை தாமதமாக விடுவிப்பதை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கையளிக்கும் நிகழ்வில் பங்குபற்றப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை அமைப்பதற்கு மேலும் நிலம் எதுவும் தங்களுக்கு வேண்டாம் என்று இந்திய அரசு தனக்கு முன்பே தெரிவித்திருந்ததாகவும் ஆனால் பலாலி விமான நிலையப் பகுதியில் இராணுவம் தொடர்வது விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் 

விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தேவைப்படுவதை விட அதிகமான நிலத்தை அவர்கள் தடுத்து வைத்துள்ளது ஏன் என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில், குறைந்தளவான காணியை ரணில் விடுவித்திருப்பது – வெறும் கண்துடைப்பு – விக்கி அறிக்கை யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு 197 குடும்பங்களுக்கு நாளையதினம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ள நிலையில் இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் ஆனாலும் அதனை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு அவர் இன்று அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மிகக் குறைவான நிலத்தை தாமதமாக விடுவிப்பதை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கையளிக்கும் நிகழ்வில் பங்குபற்றப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை அமைப்பதற்கு மேலும் நிலம் எதுவும் தங்களுக்கு வேண்டாம் என்று இந்திய அரசு தனக்கு முன்பே தெரிவித்திருந்ததாகவும் ஆனால் பலாலி விமான நிலையப் பகுதியில் இராணுவம் தொடர்வது விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தேவைப்படுவதை விட அதிகமான நிலத்தை அவர்கள் தடுத்து வைத்துள்ளது ஏன் என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement