• May 07 2024

திருமலையில் படகு விபத்தில் சிக்கிய மீனவர்கள்!

Sharmi / Feb 2nd 2023, 3:49 pm
image

Advertisement

திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காகச் கடந்த 24 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற மீன்பிடி படகொன்று படகோட்டியின் தூக்கத்தினாலும் ,காற்றினாலும் கடந்த 31 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு மீனவர்கள் படகிலிருந்து பாய்ந்து ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடல் பகுதியிலுள்ள மலையொன்றில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் ஏறி நின்றுள்ளனர்.

இவ் விபத்தில் குறித்த மீன்பிடி படகு சேதமாகியுள்ளது.

நேற்று அதிகாலை இவர்கள் குறித்த மலையில் ஏறி நின்றுள்ளனர்.எனினும் இவர்களை கிராமவாசிகள் மாலைவேளையில் அவதானித்து இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடல் சீற்றத்தால் இவர்களை நேற்று மீட்கமுடியவில்லை.இருப்பினும் குறித்த இடத்திற்கு கடற்படையினர், பொலிஸார் இன்று காலை வருகைதந்தனர்.இதன்பின் காலை 8.00 மணியளவில் கடற்டையினர் படகில் சென்று குறித்த நான்கு மீனவர்களையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்து காப்பாற்றினர்.

அத்தோடு குறித்த மீனவர்களுக்கு கடற்படையினர் உணவு குடிநீர் வசதிகளையும் செய்து கொடுத்தனர்.படகு விபத்தில் இரண்டு மீனவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கு கடற்படையினர் முதலுதவிகளையும் வழங்கியதை காணமுடிந்தது.

இதற்போது காப்பாற்றப்பட்ட மீனவர்கள் நாலக்க சமன் குணரட்ண (31) ,டீ.ஓ.பிரேமதாஷ (57) ,டீ.எச்.காமினி பிரசன்ன (42) ,கே.ஜி பிரித்தி குமார (52) ஆகியோர்களாவர்.

காப்பாற்றப்பட்ட நான்கு மீனவர்களும் தற்போது ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலாஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


திருமலையில் படகு விபத்தில் சிக்கிய மீனவர்கள் திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காகச் கடந்த 24 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற மீன்பிடி படகொன்று படகோட்டியின் தூக்கத்தினாலும் ,காற்றினாலும் கடந்த 31 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு மீனவர்கள் படகிலிருந்து பாய்ந்து ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடல் பகுதியிலுள்ள மலையொன்றில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் ஏறி நின்றுள்ளனர். இவ் விபத்தில் குறித்த மீன்பிடி படகு சேதமாகியுள்ளது. நேற்று அதிகாலை இவர்கள் குறித்த மலையில் ஏறி நின்றுள்ளனர்.எனினும் இவர்களை கிராமவாசிகள் மாலைவேளையில் அவதானித்து இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கடல் சீற்றத்தால் இவர்களை நேற்று மீட்கமுடியவில்லை.இருப்பினும் குறித்த இடத்திற்கு கடற்படையினர், பொலிஸார் இன்று காலை வருகைதந்தனர்.இதன்பின் காலை 8.00 மணியளவில் கடற்டையினர் படகில் சென்று குறித்த நான்கு மீனவர்களையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்து காப்பாற்றினர். அத்தோடு குறித்த மீனவர்களுக்கு கடற்படையினர் உணவு குடிநீர் வசதிகளையும் செய்து கொடுத்தனர்.படகு விபத்தில் இரண்டு மீனவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கு கடற்படையினர் முதலுதவிகளையும் வழங்கியதை காணமுடிந்தது. இதற்போது காப்பாற்றப்பட்ட மீனவர்கள் நாலக்க சமன் குணரட்ண (31) ,டீ.ஓ.பிரேமதாஷ (57) ,டீ.எச்.காமினி பிரசன்ன (42) ,கே.ஜி பிரித்தி குமார (52) ஆகியோர்களாவர். காப்பாற்றப்பட்ட நான்கு மீனவர்களும் தற்போது ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலாஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement