• Apr 28 2024

சரும நிறத்தை பேணும் அபூர்வ வழிமுறைகள்!

Tamil nila / Jan 8th 2023, 8:02 pm
image

Advertisement

வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.


எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.


கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.


புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.


பச்சை காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு பழச் சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும்.


சரும நிறத்தை பேணும் அபூர்வ வழிமுறைகள் வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.பச்சை காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு பழச் சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

Advertisement

Advertisement

Advertisement