• Jul 21 2025

சர்ச்சைக்குரிய பாட்னருடன் இலங்கை வந்த ரவிமோகன்; அமைச்சர் விஜிதஹேரத் உடன் விசேட சந்திப்பு

shanuja / Jul 19th 2025, 6:37 pm
image

தென்னிந்தியப் பிரபல நடிகர் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோர் இன்று இலங்கைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். 


எந்தவொரு ஏற்பாடுகளுமின்றி இரகசிமாக பிரபல நடிகர் மற்றும் பாடகி கெனீஷா நாட்டை வந்தடைந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இலங்கையை வந்தடைந்த நடிகர் ரவிமோகன் , பாடகி கெனீஷா ஆகியோருக்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படங்கள் ஊடாக இலங்கையின் சுற்றுலாத் தளங்களையும், வரலாற்று கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.


பிரபல நடிகர் ரவிமோகன் - ஆர்த்தியின் விவாகரத்து விடயம் ஓடிக்கொண்டிருக்கையில் மறுபுறம் அவர் பாடகி கெனீஷாவுடன் இணைந்து பல இடங்களுக்குச் செல்வது சமூக வலைத்தளங்களில் கிசுகிசுப்பை ஏற்படுத்திய நிலையில் இருவருமாக இணைந்து இன்று திடீரென இலங்கையை வந்தடைந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

சர்ச்சைக்குரிய பாட்னருடன் இலங்கை வந்த ரவிமோகன்; அமைச்சர் விஜிதஹேரத் உடன் விசேட சந்திப்பு தென்னிந்தியப் பிரபல நடிகர் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோர் இன்று இலங்கைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். எந்தவொரு ஏற்பாடுகளுமின்றி இரகசிமாக பிரபல நடிகர் மற்றும் பாடகி கெனீஷா நாட்டை வந்தடைந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை வந்தடைந்த நடிகர் ரவிமோகன் , பாடகி கெனீஷா ஆகியோருக்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படங்கள் ஊடாக இலங்கையின் சுற்றுலாத் தளங்களையும், வரலாற்று கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.பிரபல நடிகர் ரவிமோகன் - ஆர்த்தியின் விவாகரத்து விடயம் ஓடிக்கொண்டிருக்கையில் மறுபுறம் அவர் பாடகி கெனீஷாவுடன் இணைந்து பல இடங்களுக்குச் செல்வது சமூக வலைத்தளங்களில் கிசுகிசுப்பை ஏற்படுத்திய நிலையில் இருவருமாக இணைந்து இன்று திடீரென இலங்கையை வந்தடைந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement