• May 17 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார்..! மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு..! samugammedia

Chithra / Nov 29th 2023, 3:37 pm
image

Advertisement


அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.

அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறி உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சுப் பதவியை இழந்த ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது 

வேட்பாளராக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரொஷான் ரணசிங்க கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களினால் அமைச்சர் 

பதவியை இழக்க நேரிடும் என்பதை அறிந்நே செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியா தவறா என்பது வெவ்வேறு நபர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார். மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு. samugammedia அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறி உள்ளார்.இந்த நிலையில் அமைச்சுப் பதவியை இழந்த ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரொஷான் ரணசிங்க கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களினால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்பதை அறிந்நே செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியா தவறா என்பது வெவ்வேறு நபர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement