• Nov 28 2024

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க தயார்...! சுமந்திரன் எம்.பியிடம் தெரிவித்த சஜித்...!

Sharmi / May 27th 2024, 12:28 pm
image

மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தனக்கு உறுதியளித்ததாக   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்றையதினம் (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த மேதின நிகழ்வில் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவேன் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே சஜித் பிரேமதாசவை சந்தித்த போது, கடந்த மேதின நிகழ்வில் தான் வெளியிட்ட அறிக்கையை செவிமடுத்தீர்களா என கேள்வி யெழுப்பியிருந்ததாகவும், அதேவேளை மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13 ஐ முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாகவும் மீண்டும் கூறியதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

அதேவேளை கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல 13 ஐ தாண்டி செல்வதை பற்றியும் சிந்தித்து நிலைப்பாட்டை தங்களுக்கு அறிவிக்குமாறு சஜித்திடம் கோரியுள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க தயார். சுமந்திரன் எம்.பியிடம் தெரிவித்த சஜித். மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தனக்கு உறுதியளித்ததாக   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.யாழில் இன்றையதினம் (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த மேதின நிகழ்வில் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவேன் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே சஜித் பிரேமதாசவை சந்தித்த போது, கடந்த மேதின நிகழ்வில் தான் வெளியிட்ட அறிக்கையை செவிமடுத்தீர்களா என கேள்வி யெழுப்பியிருந்ததாகவும், அதேவேளை மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13 ஐ முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாகவும் மீண்டும் கூறியதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.அதேவேளை கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல 13 ஐ தாண்டி செல்வதை பற்றியும் சிந்தித்து நிலைப்பாட்டை தங்களுக்கு அறிவிக்குமாறு சஜித்திடம் கோரியுள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement