• Nov 22 2024

அநுர அரசுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தயார்! மொட்டு கட்சி பகிரங்க அறிவிப்பு

Chithra / Oct 15th 2024, 1:29 pm
image

 

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்சி என்ற வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்தார். 

கட்சி என்ற வகையில் எதிர்கால பயணத்தை எந்த வகையிலும் இழுத்தடிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதில், ஒரு கட்சியாகவும், அரசாங்கமாகவும் பொருளாதாரத்தை மறந்து மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து நாங்கள் தவறு செய்தோம். 

அந்தத் தவறுக்கான பதிலை இதுவரை மக்கள் எமக்கு அளித்துள்ளனர். கட்சி என்ற வகையில், மக்களின் அந்த முடிவை நாங்கள் பணிவாகவும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த நாட்டில் நேர்மையாக சிந்திக்கும் தேசியம் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளது.

அந்த முடிவை ஏற்றுக் கொண்டவுடன், இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய திட்டத்தை நேர்மையாக முன்வைப்போம்.

எதிர்வரும் ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் கட்சி என்ற வகையில் நாங்கள் உண்மையாக ஆதரவளிப்போம் என நம்புகிறோம். 

வளர்ச்சிக்கான பயணத்தில் நாங்கள் எந்த வகையிலும் கால்களை பின்னே இழுக்கப் போவதில்லை என்றார். 

அநுர அரசுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தயார் மொட்டு கட்சி பகிரங்க அறிவிப்பு  தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்சி என்ற வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்தார். கட்சி என்ற வகையில் எதிர்கால பயணத்தை எந்த வகையிலும் இழுத்தடிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதில், ஒரு கட்சியாகவும், அரசாங்கமாகவும் பொருளாதாரத்தை மறந்து மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து நாங்கள் தவறு செய்தோம். அந்தத் தவறுக்கான பதிலை இதுவரை மக்கள் எமக்கு அளித்துள்ளனர். கட்சி என்ற வகையில், மக்களின் அந்த முடிவை நாங்கள் பணிவாகவும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறோம்.இந்த நாட்டில் நேர்மையாக சிந்திக்கும் தேசியம் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளது.அந்த முடிவை ஏற்றுக் கொண்டவுடன், இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய திட்டத்தை நேர்மையாக முன்வைப்போம்.எதிர்வரும் ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் கட்சி என்ற வகையில் நாங்கள் உண்மையாக ஆதரவளிப்போம் என நம்புகிறோம். வளர்ச்சிக்கான பயணத்தில் நாங்கள் எந்த வகையிலும் கால்களை பின்னே இழுக்கப் போவதில்லை என்றார். 

Advertisement

Advertisement

Advertisement