முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டில் இல்லை. அவர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம். மேலும், அனைத்து வலதுசாரி அரசியல்வாதிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறும் அழைப்பு விடுத்தார்.
ரணில் விக்கிரமசிங்க உட்பட அனைத்து வலதுசாரி அரசியல் குழுக்களும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து இந்த பிளவுகளை களைந்து முன்னோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்” என அவர் மேலும் கூறினார்.
தலைமைப் பொறுப்பை வழங்கினால் ஐ.தே.கவுடன் இணையத் தயார் - ஹர்ஷன ராஜகருணா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டில் இல்லை. அவர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம். மேலும், அனைத்து வலதுசாரி அரசியல்வாதிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறும் அழைப்பு விடுத்தார்.ரணில் விக்கிரமசிங்க உட்பட அனைத்து வலதுசாரி அரசியல் குழுக்களும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து இந்த பிளவுகளை களைந்து முன்னோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்” என அவர் மேலும் கூறினார்.