• Nov 27 2024

இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு தயார்- பிரான்ஸ் ஜனாதிபதி அனுரவுக்கு வாழ்த்து..!

Sharmi / Sep 24th 2024, 8:11 am
image

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்  தனது முகநூலில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

இலங்கை மக்கள், அன்பு நண்பர்களே,

உங்கள் ஜனாதிபதி தேர்தலின் முன்னுதாரணமாக நடப்பது உங்கள் நாட்டின் ஜனநாயகத்தின் உயிர்த்தன்மையின் சக்திவாய்ந்த அறிகுறியாகும். வெற்றிக்கு வாழ்த்துக்கள் அனுர திஸாநாயக்க!

எம்மை ஒருங்கிணைக்கும் நம்பிக்கை மற்றும் கூட்டுத்தாபனத்தை வளர்த்து இலங்கையுடன் ஒத்துழைப்பை முன்னெடுக்க பிரான்ஸ் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட மற்றுமொரு பதிவில்,

உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது.

அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும் எனவும் தெரிவித்தார்.






இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு தயார்- பிரான்ஸ் ஜனாதிபதி அனுரவுக்கு வாழ்த்து. இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்  தனது முகநூலில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த பதிவில்,இலங்கை மக்கள், அன்பு நண்பர்களே,உங்கள் ஜனாதிபதி தேர்தலின் முன்னுதாரணமாக நடப்பது உங்கள் நாட்டின் ஜனநாயகத்தின் உயிர்த்தன்மையின் சக்திவாய்ந்த அறிகுறியாகும். வெற்றிக்கு வாழ்த்துக்கள் அனுர திஸாநாயக்கஎம்மை ஒருங்கிணைக்கும் நம்பிக்கை மற்றும் கூட்டுத்தாபனத்தை வளர்த்து இலங்கையுடன் ஒத்துழைப்பை முன்னெடுக்க பிரான்ஸ் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட மற்றுமொரு பதிவில்,உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது.அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement