• Apr 28 2024

இலங்கைக்கும் கடன் வழங்கிய நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு - சர்வதேச நாணய நிதியம் விசேட அறிக்கை

Chithra / Nov 30th 2023, 11:41 am
image

Advertisement


கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு இலங்கைக்கான முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இந்த இணக்கப்பாடு இலங்கைக்கான நான்குவருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல்தொகுதி நிதி உதவி குறித்த மறுஆய்வினை பூர்த்தி செய்வதற்கு உதவும் என இலங்கைக்கான சர்வதேசநாணயநிதிய பிரதிகள் குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று சபை டிசம்பர் நடுப்பகுதியில் மீளாய்வை முன்னெடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் உட்பட 17 நாடுகள் மே 9ம் திகதி உருவாக்கின என உத்தியோகபூர்வ கடன் குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுடன் ஒத்துப்போகும் விதத்தில்  கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும் உத்தியோகபூர்வ கடன் குழுவும் இணங்கியுள்ளன என கடன்குழு தெரிவித்துள்ளது

இலங்கைக்கும் கடன் வழங்கிய நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு - சர்வதேச நாணய நிதியம் விசேட அறிக்கை கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு இலங்கைக்கான முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.இந்த இணக்கப்பாடு இலங்கைக்கான நான்குவருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல்தொகுதி நிதி உதவி குறித்த மறுஆய்வினை பூர்த்தி செய்வதற்கு உதவும் என இலங்கைக்கான சர்வதேசநாணயநிதிய பிரதிகள் குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று சபை டிசம்பர் நடுப்பகுதியில் மீளாய்வை முன்னெடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் உட்பட 17 நாடுகள் மே 9ம் திகதி உருவாக்கின என உத்தியோகபூர்வ கடன் குழு தெரிவித்துள்ளது.இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுடன் ஒத்துப்போகும் விதத்தில்  கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும் உத்தியோகபூர்வ கடன் குழுவும் இணங்கியுள்ளன என கடன்குழு தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement