• Nov 17 2024

அனலைதீவு பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

Sharmi / Aug 1st 2024, 1:37 pm
image

நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதியினை  புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதியின் புனரமைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்துக்கு கொண்டுசென்ற நிலையில்,  2024 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண , குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1.7,கிலோ மீட்டர் வீதியின் புனரமைப்புக்கென  25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  இன்றையதினம்(01) குறித்த  வீதியின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் அமைச்சரின் சார்பில் வடக்கு மாகாண சபையின்  முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாக பொறுப்பாளரும் முன்னாள் தவிசாளருமான மருதயினார் ஜெயகந்தன், துறைசார் அதிகாரிகள் , பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



அனலைதீவு பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம். நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதியினை  புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறித்த வீதியின் புனரமைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.இதையடுத்து அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்துக்கு கொண்டுசென்ற நிலையில்,  2024 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண , குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1.7,கிலோ மீட்டர் வீதியின் புனரமைப்புக்கென  25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில்,  இன்றையதினம்(01) குறித்த  வீதியின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் அமைச்சரின் சார்பில் வடக்கு மாகாண சபையின்  முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாக பொறுப்பாளரும் முன்னாள் தவிசாளருமான மருதயினார் ஜெயகந்தன், துறைசார் அதிகாரிகள் , பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement