• Nov 25 2024

கோழி இறைச்சி விலை குறைப்பு..? சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை

Chithra / Dec 10th 2023, 8:16 am
image

 

கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கோழி இறைச்சியின் விலை மேலும் மேலும் உயர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு இலக்காக மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாட்டில் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளம் துரித கதியில் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்பட்ட கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

கோழி இறைச்சி விலை குறைப்பு. சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை  கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.எனினும், கோழி இறைச்சியின் விலை மேலும் மேலும் உயர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு இலக்காக மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்பொழுது நாட்டில் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளம் துரித கதியில் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்பட்ட கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement