கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று கந்தசுவாமி ஆலயம் முன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போ சந்தியை வந்தடைந்து முடிவுற்றது.
இதன்போது, "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் முதல் முறையாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையில் சோர்வடையாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே! எமது பிள்ளைகள் எங்கே? எமது பிள்ளைகளை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என எண்ணி காத்திருந்து 8 வருடங்கள் நிறைவடைந்தது
ஒன்பதாவது வருடம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எவராலும் எமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என இன்று எட்டு வருடத்தை பூர்த்தி செய்த இந்நாளில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
8 வருட பூர்த்தியை தீச்சட்டிப் போராட்டத்துடன் வழியனுப்பிய- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று கந்தசுவாமி ஆலயம் முன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போ சந்தியை வந்தடைந்து முடிவுற்றது.இதன்போது, "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் முதல் முறையாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையில் சோர்வடையாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே எமது பிள்ளைகள் எங்கே எமது பிள்ளைகளை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என எண்ணி காத்திருந்து 8 வருடங்கள் நிறைவடைந்தது ஒன்பதாவது வருடம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எவராலும் எமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என இன்று எட்டு வருடத்தை பூர்த்தி செய்த இந்நாளில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது