• Apr 02 2025

அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை! நீதி அமைச்சர் உறுதி

Chithra / Dec 5th 2024, 9:17 am
image


அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவி்ததார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை  விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில், உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில் தெரிவித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நாங்கள் எமது கொள்கை உரையிலும் வாக்குறுதி அளித்திருக்கிறோம். என்றாலும் அதனை ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் செய்வது கடினம்.

அதனால் சம்பந்தப்பட்ட சட்ட பிரிவினருடன் கலந்துரையாடி மிக விரைவில் அரசியல் கைதிகள் அல்லது சாட்சி இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். 

அதேபோன்று ஊழல் மோசடி தொடர்பிலும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.  

குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம். 

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டமாகும்.  சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே எமது திட்டம். 

அதனால் இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதித்துக்கொள்ளும்வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகிறது   எனவும் தெரிவித்தார்.


அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை நீதி அமைச்சர் உறுதி அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவி்ததார்.பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை  விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில், உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில் தெரிவித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நாங்கள் எமது கொள்கை உரையிலும் வாக்குறுதி அளித்திருக்கிறோம். என்றாலும் அதனை ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் செய்வது கடினம்.அதனால் சம்பந்தப்பட்ட சட்ட பிரிவினருடன் கலந்துரையாடி மிக விரைவில் அரசியல் கைதிகள் அல்லது சாட்சி இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று ஊழல் மோசடி தொடர்பிலும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.  குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டமாகும்.  சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே எமது திட்டம். அதனால் இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதித்துக்கொள்ளும்வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகிறது   எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement