• Apr 02 2025

அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு - இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு

Chithra / Dec 5th 2024, 9:09 am
image


அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வாக, இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புறகோட்டையிலுள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவில் இருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக  இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியாருக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியின் பிரகாரம், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டிசம்பர் 31ஆம் திகதி வரை போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் சிறிதளவு அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு, கெகுலு, சம்பா அரிசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு - இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வாக, இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.புறகோட்டையிலுள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவில் இருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக  இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தனியாருக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியின் பிரகாரம், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டிசம்பர் 31ஆம் திகதி வரை போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் சிறிதளவு அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாடு, கெகுலு, சம்பா அரிசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement