• Apr 28 2024

ஒரு வழக்கில் இருந்தே விடுதலை உத்தரவு – வசந்த முதலிகேவிற்கு தொடரும் விளக்கமறியல்!

Chithra / Jan 31st 2023, 2:29 pm
image

Advertisement

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சில வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு கொழுப்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு உருவாக்கியுள்ளதாக நீதிவான் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு வழக்கில் இருந்தே விடுதலை உத்தரவு – வசந்த முதலிகேவிற்கு தொடரும் விளக்கமறியல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் இருந்து வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சில வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான வழக்கு கொழுப்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்.பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு உருவாக்கியுள்ளதாக நீதிவான் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement