• Oct 06 2024

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் விடுவது எமது கடற்பரப்பில் இருக்கும் மீன்களை அழிக்கும் செயல்! சுரேஸ் SamugamMedia

Chithra / Feb 15th 2023, 12:00 pm
image

Advertisement

இழுவை மடியினை இலங்கை கடற்பரப்புக்குள் விடுவது எமது கடற்பரப்பில்  இருக்கும் மீன்களை அழிப்பதாக இருக்கும். இப்பொழுது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வருகிறார்கள் என்றால் அவர்களுடைய கடற்பரப்பில் உள்ள மீன்கள் முழுதாக அழிக்கப்பட்டு விட்டது என்பதே காரணமாகும் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கலாமா போன்ற கருத்துக்கள் முன் இடம் பெற்றது. அதேபோன்று இப்பொழுது சில மீனவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து எமது கடலுக்குள் விடுவது குறித்து இப்போது வருகை தந்த இந்திய கடல் தொழில் அமைச்சர் இலங்கை அரசாங்கத்திடம் பேசி இருக்கலாம். நிச்சயமாக எனக்கு தெரியாது. 

அவ்வாறு பேசப்பட்டு இருந்தாலும் எனது மாணவர்கள் உங்களுக்கு முக்கியமான கருத்து  இழுவை மடி மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்கள். ஆகவே இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் படகு போன்று இந்திய மீனவர்களும் பயன்படுத்துவார்களாயின் வாரத்திற்கு எத்தனை நாட்கள் இடம் வழங்க முடியுமோ என்பது தொடர்பில் அவ்வாறான சலுகைகளை யோசிக்க முடியும். 

அவ்வாறில்லாமல் இப்பொழுது இந்திய மீனவர்கள் பாதிக்கும் மிகப்பெரிய  இழுவை மடியினை  இலங்கை கடற்பரப்புக்குள் விடுவது  எமது கடல் பரப்பில்  இருக்கும் மீன்களை அளிப்பதாக இருக்கும். 

இப்பொழுது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வருகிறார்கள் என்றால் அவர்களுடைய கடற்பரப்பில் உள்ள மீன்கள் முழுதாக அழிக்கப்பட்டு விட்டது என்பதே காரணம் ஆகும்.

தேர்தல் பற்றிய கருத்து, 

நடைபெற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் தேர்தல் ஆணையம் ஜனாதிபதி போன்றோர் பல்வேறுபட்ட முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவர்களுடைய கருத்துக்களால் வேட்பாளர்கள், மக்கள், கட்சிகள் அனைத்தும் ஒரு குழப்பகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் தேர்தல் ஆனையாளர் குறிக்கப்பட்ட திகதியில் தேர்தல் நடக்கும் என்று  அறிவித்திருந்தார். 

 அதன்பின் சட்ட பூர்வமாக வர்த்தமானி ஊடாக மார்ச் 9 தேர்தல் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்தார். தேர்தல் ஆணையாளருக்கு இருக்கக்கூடிய  சுதந்திர தேர்தல் திணைகளம் என்ற அடிப்படையில் சட்டத்தின் பிரகாரம் அதற்கு தேர்தலை அறிவிக்க முடியும் என இருந்தாலும் தேர்தலை நடத்துவதற்கான நிதி, பாதுகாப்பு போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்யாது தேர்தல் காண திகதியை  அறிவித்துள்ளார். 

இப்பொழுது அதே தேர்தல் ஆணையாளர் 100 கோடி ரூபாய் நிதி தேர்தலை நடத்த தேவை எனவும் அதில் ஒரு சொற்பத்தொகை 10 கோடி இணை மாத்திரமே திரைசேரி ஒதுக்கியுள்ளதாகவும் மிகுதி பணம் கிடைக்காததால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்க முடியவில்லை எனவும் கூறி இருக்கின்றார். 

அது மட்டுமன்றி திரை சேரி  நிதியினை விடுவிக்காவிடில் நீதிமன்றம் சொல்ல இருப்பதாகவும் கூறுகின்றார். 

ஒரு தேர்தலை நடத்த என்னென்ன அடிப்படை விஷயங்கள் வேண்டும் என்பது நிச்சயமாக தேர்தல் ஆணையாளருக்கு தெரியும். இன்று இருக்கும் சூழலில் பெற்றோர் டீசல் போன்றவை தட்டுப்பாடு.  தேர்தலை நடத்தி முடிக்க அதற்கான உத்தியோகத்தர்களை கொண்டு செல்வதற்கு, வாக்குபட்டிகளை ஏத்தி இறக்குவதற்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வேண்டும். 

அதேபோன்று பாதுகாப்பிற்கு போலீசுக்கு பல நூறு வாகனங்கள் வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாது தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தது மாத்திரமன்றி ஒன்று தேர்தல் நடக்குமா இல்லையா என்ற நிலைக்கு வேட்பாளர்களையும் அரசியல் கட்சிகளையும் தள்ளி இருக்கின்றார்கள். 

கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய வசதிகள் அற்ற வேட்பாளர்கள் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து கொடுக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் அவர்களது நிலை என்ன? அவர்கள் செலவழித்த பணத்தினை இலங்கை அரசாங்கமே அல்லது தேர்தல் ஆணையகமோ திரும்ப கொடுப்பார்களா? 

பல பேர் தமது அரச உத்தியோகங்களை லீவு எடுத்து தாங்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 800- 1000 அளவில்  கிட்டத்தட்ட உத்தியோகத்தர்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவது ஆயின் எப்போது செல்வது? எவ்வளவு காலங்களுக்கு தேர்தல் பின்னால் சொல்லப் போகிறது ? தேர்தல் நடக்கா விடில் இதற்குரிய சம்பளங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படுமா?  


ஜனநாயகத்தில் தெரிவு என்பதும் வாக்களிப்பு என்பதும் முக்கியம். ஜனாதிபதி தான் தேர்தலுக்கு எதிரியில்லை என்று கூறினாலும் அவரே நிதி அமைச்சராக உள்ளார் திரைசேரிக்கு பொறுப்பாக உள்ளார் நிதியை தேர்தலுக்கு அளிப்பதற்கு தயாராக இல்லை. அதே நேரம் தேர்தல் நடத்த வேண்டாம் என சொல்லவும் அவர்கள் தயாராகவில்லை. அரசாங்கத்தின் நிர்வாகமானது மோசமான நிலையில் உள்ளது.  

தேர்தலுக்கு பொறுப்பு தேர்தல் ஆணையம் என ஜனாதிபதி இருப்பதும் தேர்தலுக்குரிய நிதியினை ஜனாதிபதி விடுவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் இருப்பதும் தேர்தலின் மேல் நம்பிக்கை வைக்காத சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

உம்மைப் பொறுத்த மட்டில்  உடனடியாக இந்த அரசாங்கம்  தேர்தல் ஆணையாளர் ஆகியோர் இந்த தேர்தல் நடக்குமா இல்லையா என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தேர்தல் நடக்காவடியில் அதற்கான பொறுப்பினை ஜனாதிபதியும் தேர்தல் ஆணையம் ஏற்று வேட்பாளர்கள் செலவிட்ட பணத்தை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.-என்றார்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் விடுவது எமது கடற்பரப்பில் இருக்கும் மீன்களை அழிக்கும் செயல் சுரேஸ் SamugamMedia இழுவை மடியினை இலங்கை கடற்பரப்புக்குள் விடுவது எமது கடற்பரப்பில்  இருக்கும் மீன்களை அழிப்பதாக இருக்கும். இப்பொழுது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வருகிறார்கள் என்றால் அவர்களுடைய கடற்பரப்பில் உள்ள மீன்கள் முழுதாக அழிக்கப்பட்டு விட்டது என்பதே காரணமாகும் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கலாமா போன்ற கருத்துக்கள் முன் இடம் பெற்றது. அதேபோன்று இப்பொழுது சில மீனவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து எமது கடலுக்குள் விடுவது குறித்து இப்போது வருகை தந்த இந்திய கடல் தொழில் அமைச்சர் இலங்கை அரசாங்கத்திடம் பேசி இருக்கலாம். நிச்சயமாக எனக்கு தெரியாது. அவ்வாறு பேசப்பட்டு இருந்தாலும் எனது மாணவர்கள் உங்களுக்கு முக்கியமான கருத்து  இழுவை மடி மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்கள். ஆகவே இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் படகு போன்று இந்திய மீனவர்களும் பயன்படுத்துவார்களாயின் வாரத்திற்கு எத்தனை நாட்கள் இடம் வழங்க முடியுமோ என்பது தொடர்பில் அவ்வாறான சலுகைகளை யோசிக்க முடியும். அவ்வாறில்லாமல் இப்பொழுது இந்திய மீனவர்கள் பாதிக்கும் மிகப்பெரிய  இழுவை மடியினை  இலங்கை கடற்பரப்புக்குள் விடுவது  எமது கடல் பரப்பில்  இருக்கும் மீன்களை அளிப்பதாக இருக்கும். இப்பொழுது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வருகிறார்கள் என்றால் அவர்களுடைய கடற்பரப்பில் உள்ள மீன்கள் முழுதாக அழிக்கப்பட்டு விட்டது என்பதே காரணம் ஆகும்.தேர்தல் பற்றிய கருத்து, நடைபெற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் தேர்தல் ஆணையம் ஜனாதிபதி போன்றோர் பல்வேறுபட்ட முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவர்களுடைய கருத்துக்களால் வேட்பாளர்கள், மக்கள், கட்சிகள் அனைத்தும் ஒரு குழப்பகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் தேர்தல் ஆனையாளர் குறிக்கப்பட்ட திகதியில் தேர்தல் நடக்கும் என்று  அறிவித்திருந்தார்.  அதன்பின் சட்ட பூர்வமாக வர்த்தமானி ஊடாக மார்ச் 9 தேர்தல் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்தார். தேர்தல் ஆணையாளருக்கு இருக்கக்கூடிய  சுதந்திர தேர்தல் திணைகளம் என்ற அடிப்படையில் சட்டத்தின் பிரகாரம் அதற்கு தேர்தலை அறிவிக்க முடியும் என இருந்தாலும் தேர்தலை நடத்துவதற்கான நிதி, பாதுகாப்பு போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்யாது தேர்தல் காண திகதியை  அறிவித்துள்ளார். இப்பொழுது அதே தேர்தல் ஆணையாளர் 100 கோடி ரூபாய் நிதி தேர்தலை நடத்த தேவை எனவும் அதில் ஒரு சொற்பத்தொகை 10 கோடி இணை மாத்திரமே திரைசேரி ஒதுக்கியுள்ளதாகவும் மிகுதி பணம் கிடைக்காததால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்க முடியவில்லை எனவும் கூறி இருக்கின்றார். அது மட்டுமன்றி திரை சேரி  நிதியினை விடுவிக்காவிடில் நீதிமன்றம் சொல்ல இருப்பதாகவும் கூறுகின்றார். ஒரு தேர்தலை நடத்த என்னென்ன அடிப்படை விஷயங்கள் வேண்டும் என்பது நிச்சயமாக தேர்தல் ஆணையாளருக்கு தெரியும். இன்று இருக்கும் சூழலில் பெற்றோர் டீசல் போன்றவை தட்டுப்பாடு.  தேர்தலை நடத்தி முடிக்க அதற்கான உத்தியோகத்தர்களை கொண்டு செல்வதற்கு, வாக்குபட்டிகளை ஏத்தி இறக்குவதற்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வேண்டும். அதேபோன்று பாதுகாப்பிற்கு போலீசுக்கு பல நூறு வாகனங்கள் வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாது தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தது மாத்திரமன்றி ஒன்று தேர்தல் நடக்குமா இல்லையா என்ற நிலைக்கு வேட்பாளர்களையும் அரசியல் கட்சிகளையும் தள்ளி இருக்கின்றார்கள். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய வசதிகள் அற்ற வேட்பாளர்கள் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து கொடுக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் அவர்களது நிலை என்ன அவர்கள் செலவழித்த பணத்தினை இலங்கை அரசாங்கமே அல்லது தேர்தல் ஆணையகமோ திரும்ப கொடுப்பார்களா பல பேர் தமது அரச உத்தியோகங்களை லீவு எடுத்து தாங்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 800- 1000 அளவில்  கிட்டத்தட்ட உத்தியோகத்தர்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவது ஆயின் எப்போது செல்வது எவ்வளவு காலங்களுக்கு தேர்தல் பின்னால் சொல்லப் போகிறது தேர்தல் நடக்கா விடில் இதற்குரிய சம்பளங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படுமா  ஜனநாயகத்தில் தெரிவு என்பதும் வாக்களிப்பு என்பதும் முக்கியம். ஜனாதிபதி தான் தேர்தலுக்கு எதிரியில்லை என்று கூறினாலும் அவரே நிதி அமைச்சராக உள்ளார் திரைசேரிக்கு பொறுப்பாக உள்ளார் நிதியை தேர்தலுக்கு அளிப்பதற்கு தயாராக இல்லை. அதே நேரம் தேர்தல் நடத்த வேண்டாம் என சொல்லவும் அவர்கள் தயாராகவில்லை. அரசாங்கத்தின் நிர்வாகமானது மோசமான நிலையில் உள்ளது.  தேர்தலுக்கு பொறுப்பு தேர்தல் ஆணையம் என ஜனாதிபதி இருப்பதும் தேர்தலுக்குரிய நிதியினை ஜனாதிபதி விடுவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் இருப்பதும் தேர்தலின் மேல் நம்பிக்கை வைக்காத சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உம்மைப் பொறுத்த மட்டில்  உடனடியாக இந்த அரசாங்கம்  தேர்தல் ஆணையாளர் ஆகியோர் இந்த தேர்தல் நடக்குமா இல்லையா என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தேர்தல் நடக்காவடியில் அதற்கான பொறுப்பினை ஜனாதிபதியும் தேர்தல் ஆணையம் ஏற்று வேட்பாளர்கள் செலவிட்ட பணத்தை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.-என்றார்.

Advertisement

Advertisement

Advertisement