• May 21 2024

மயிலத்தமடுவில் இடம்பெற்ற பிக்குவின் அராஜகத்துக்கு எதிராக மதத்தலைவர்கள் யாழில் கண்டனப்போராட்டம்...!samugammedia

Sharmi / Aug 30th 2023, 11:28 pm
image

Advertisement

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்,  மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை, பெரும்பாண்மை இனத்தவருடன் இணைந்து பிக்கு ஒருவர் அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து  இலங்கை திருச்சபையால் கண்டன அறிக்கை வெளியீடும் கண்டன எதிர்ப்பு நிகழ்வும் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக கடந்த செவ்வாய்கிழமை (22.09.2023) களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்,  மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை, அங்கு அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவர்களும், அங்கிருந்த பௌத்த மதகுரு ஒருவரும் சுற்றிவளைத்து தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தியிருந்தனர்.

சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் முறையான  கலந்துரையாடலை மேற்கொள்ளாமல் அச்சுறுத்தல் விடுத்தமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என தெரிவித்தே மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த இலங்கை திருச்சபையின் யாழ் குருமுதல்வர் திருவருட்பணி S. D. P. செல்வன்,


கடந்த 22ம் திகதி மட்டக்களப்பு மயிலத்தமடுவுக்கு சென்ற சர்வமத தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் சுமார்5 மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதேவேளை அங்கிருந்த பௌத்த மதகுருவும்  அங்கிருந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்திருக்கலாம் எனினும் அதனை செய்யாது அவர்களை தடுத்து வைத்திருந்து அச்சுறுத்தியமையானது நாங்கள் இலங்கை நாடு ஜனநாயக நாடு நாங்கள் ஒருவர் மற்றவரை மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகின்றோம் ஆனால்  எங்களால் இந்த சமய விழுமியங்களை மதிக்க முடியவில்லையென்றால் நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்பது பெரியதொரு கேள்வி. ஆகவே நாங்கள் எல்லோரும் இதை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அதேவேளை சர்வமத அமைப்பாக இதனை முன்னெடுப்பது அவசியம்.

அதேவேளை சட்டத்தை யாரும் கையிலே எடுக்ககூடாது எந்தவொரு நபரும் தமது இனம் மதம் என்று கூறிக்கொண்டு தாங்கள்தான் ஆதீக்கம் செய்வோம் என்பதை கூறமுடியாது. இங்கே எல்லோரும் சமன்.

அதேவேளை மனித விழுமியங்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். ஆகவே நாம் எல்லோரும் சமமாக வாழவேண்டிய சூழ்நிலை வருவதற்காக தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் எனவும் தெரிவித்தார்.


மயிலத்தமடுவில் இடம்பெற்ற பிக்குவின் அராஜகத்துக்கு எதிராக மதத்தலைவர்கள் யாழில் கண்டனப்போராட்டம்.samugammedia மட்டக்களப்பு மயிலத்தமடுவில் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்,  மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை, பெரும்பாண்மை இனத்தவருடன் இணைந்து பிக்கு ஒருவர் அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து  இலங்கை திருச்சபையால் கண்டன அறிக்கை வெளியீடும் கண்டன எதிர்ப்பு நிகழ்வும் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக கடந்த செவ்வாய்கிழமை (22.09.2023) களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்,  மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை, அங்கு அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவர்களும், அங்கிருந்த பௌத்த மதகுரு ஒருவரும் சுற்றிவளைத்து தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தியிருந்தனர். சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் முறையான  கலந்துரையாடலை மேற்கொள்ளாமல் அச்சுறுத்தல் விடுத்தமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என தெரிவித்தே மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த இலங்கை திருச்சபையின் யாழ் குருமுதல்வர் திருவருட்பணி S. D. P. செல்வன்,கடந்த 22ம் திகதி மட்டக்களப்பு மயிலத்தமடுவுக்கு சென்ற சர்வமத தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் சுமார்5 மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதேவேளை அங்கிருந்த பௌத்த மதகுருவும்  அங்கிருந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்திருக்கலாம் எனினும் அதனை செய்யாது அவர்களை தடுத்து வைத்திருந்து அச்சுறுத்தியமையானது நாங்கள் இலங்கை நாடு ஜனநாயக நாடு நாங்கள் ஒருவர் மற்றவரை மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகின்றோம் ஆனால்  எங்களால் இந்த சமய விழுமியங்களை மதிக்க முடியவில்லையென்றால் நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்பது பெரியதொரு கேள்வி. ஆகவே நாங்கள் எல்லோரும் இதை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அதேவேளை சர்வமத அமைப்பாக இதனை முன்னெடுப்பது அவசியம்.அதேவேளை சட்டத்தை யாரும் கையிலே எடுக்ககூடாது எந்தவொரு நபரும் தமது இனம் மதம் என்று கூறிக்கொண்டு தாங்கள்தான் ஆதீக்கம் செய்வோம் என்பதை கூறமுடியாது. இங்கே எல்லோரும் சமன்.அதேவேளை மனித விழுமியங்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். ஆகவே நாம் எல்லோரும் சமமாக வாழவேண்டிய சூழ்நிலை வருவதற்காக தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement